Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிர வாள்வீச்சுப் பயிற்சியில் ஷாகித் கபூர்; டிவிட்டரில் வைரல் ஆன புகைப்படம்!

பாலிவுட்டில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், 'பத்மாவதி'. தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ், சஞ்சய் தத், ஜிம் சார்ப் போன்ற முன்னணி நடிகர்களைவைத்து இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

ராஜா காலத்துக் கதை என்பதாலும், படத்தில் போர்க்களச் சண்டைக் காட்சிகள் இடம்பெறும் என்பதாலும், ஷாகித் கபூர் வாள் வீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு, தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். ஷாகித்தின் பயிற்சியாளர் சுனில் குமார், 'ஷாகித் கபூரை இதுவரை இல்லாத ஒரு நடிகராக இந்தப் படத்தில் காணலாம். அதற்காக கடினமாக உழைத்து, தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். பயிற்சியிலும் சிறந்து விளங்குகிறார்' என்று கூறினார்.

ஷாகித் கபூர்

இவர், வாள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் எடுத்த புகைப்படம், டிவிட்டரில், அவரது ரசிகர்கள் பக்கத்தில் வெளியானது. பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது. இதைவைத்து ஷாகித் கபூர், படத்தில் போர் வீரராக நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close