Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கஸ்கர், மும்பையில் கைது

இந்தியாவால் தேடப்பட்டுவரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் இளைய சகோதரர், நேற்றிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். 

1993-ம் ஆண்டு, இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 260 பொதுமக்கள் பலியாயினர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம், தாவூத் இப்ராஹிம். 

அன்று முதல் தாவூத்தை கைதுசெய்திட இந்தியா முயன்றுவருகிறது. எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பில் அவர் அங்கு வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் வேறு வேறு பெயர்களில் வெவ்வேறு வீடுகளில் வசித்துவருவதாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நம்புகின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசு இதை மறுத்துவருகிறது. 

இந்நிலையில், நேற்று தாவூத் இப்ராஹிம்மின் இளைய சகோதரர் இக்பால், மும்பைப் பகுதியில் தானே போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். மும்பை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அளித்த மிரட்டல் புகார் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்கெனவே நான்கு ஃப்ளாட்டுகளை இக்பால் எடுத்துக்கொண்டார். தற்போது, மேலும் சில ஃப்ளாட்டுகள் வேண்டும் என மிரட்டியிருக்கிறார். இதனால் அவர் புகார் அளிக்க, இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது. இக்பாலுடன் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். 

முன்னாள் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ப்ரதீப் ஷர்மா தலைமையில் அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நள்ளிரவில் மும்பையில் நடந்த கைது சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close