Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலமைச்சர் திறந்துவைக்க இருந்த தடுப்பணை உடைந்து, ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்!

பீகார் மாநிலத்தில், முதலமைச்சர்  நிதிஷ்  குமார் திறந்துவைக்க இருந்த தடுப்பணை உடைந்து, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. 


பாகல்பூர் அருகே, பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணைப் பணிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அணை கட்டும் பணிகள் ரூ.389.1 கோடி செலவில் முடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்குத் தயாராக இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை கட்டும் பணி, கடந்த 1977-ம் ஆண்டு ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. அந்த அணையை, முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதிகப்படியான வெள்ளம் காரணமாக, தடுப்பணை திடீரென நேற்று உடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த திறப்புவிழா ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய பீகார் நீர்வளத்துறை அமைச்சர் லல்லன் சிங், ‘அணையின் முழுக்கொள்ளவு நீரும் திறக்கப்பட்டதால்தான் உடைந்தது. அதேநேரம், இந்தச் சம்பவத்தால், புதிதாகக் கட்டப்பட்ட அணையின் பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close