Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநில எல்லையை ஒட்டிய சர்வதேச எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்கள் 2 பேரை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

அமிர்தசரஸின் அஞ்சாலா செக்டார் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக, எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி, ஜே.எஸ்.ஓப்ரியோ தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ’எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை நோக்கி பாகிஸ்தான் எல்லையிலிருந்து 2 பேர் வேகமாக முன்னேறி வந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை சரணடையுமாறு எச்சரிக்கை செய்தும் கேட்காமல், அவர்கள் முன்னேறினர். அதனால், பாதுகாப்புப் படை வீரர்கள்  இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்று, சிறிய ரக கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவித்தார். 

மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட அவர்களது உடல் அருகே, 4 கிலோ ஹெராயின் போதைப்பொருள், பாகிஸ்தான் சிம் கார்டு மற்றும் 20,000 ரூபாய் மதிப்பிலான பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதையடுத்து, சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close