Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2ஜி வழக்கில் அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சி.பி.ஐ தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2 ஜி வழக்கு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கடந்த 2008-ல் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளைப் பின்பற்றாததால், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தெரிவித்தது. 

நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம்குறித்து சி.பி.ஐ. கடந்த 2009-ம் ஆண்டில் வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகிறது. புகாரைத் தொடர்ந்து கடந்த 2010-ல் மத்திய அமைச்சர் ஆ.ராசா பதவியிலிருந்து விலகினார்.  இந்த வழக்கை விசாரிப்பதற்காக சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அனைத்துத் தரப்பினரின் இறுதி வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு வருகிற அக்டோபர் மாதம் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவில்லை எனில் அடுத்த 2 அல்லது 3 நாள்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  தீர்ப்பு வழங்குவதில் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று சி.பி.ஐ. தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close