Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த பெரு நகரங்களுக்கிடையே 'சொகுசு' டபுள் டெக்கர்!

பெரு நகரங்களுக்கிடையே சொகுசு டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை- கோவைக்கு இடையே டபுள் டெக்கர் பேருந்து இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட உள்ளன. 

மும்பை பெஸ்ட் டபுள் டெக்கர் பஸ்

இந்தியா முழுவதும்  டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவதற்கு, முதல் கட்டமாக 75 பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்லி-ஆக்ரா, டெல்லி-ஜெய்ப்பூர், லக்னோ - கோரக்பூர், வதோரா- மும்பை, ஜலந்தர்- ஸ்ரீநகர், கோழிக்கோடு- கொச்சி, மங்களுரு - பெங்களூரு பாதைகள் அதில் முக்கியமானவை. மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர்களிடம், டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளார். 

இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு நிதியுதவியும் வழங்கப்படும். டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்கும் போது, பெட்ரோல் செலவு குறைவதோடு, இரு மடங்குப் பயணிகளை ஏற்றிச்செல்ல வாய்ப்பிருப்பதால், அதிக லாபம் தரும் திட்டம் எனக் கூறப்படுகிறது. 

நாட்டில் 30 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள தேசியச் சாலைகளில், படிப்படியாகப் பேருந்து ஓட்டம் குறைந்துவருகிறது. 2016-ம் -ஆண்டு 45 சதவிகிதமாக இருந்த பேருந்து இயக்கம், 2017-ம் ஆண்டு 40 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. காரில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் கார் போக்குவரத்தைக் குறைப்பதை கருத்தில்கொண்டு, டபுள் டெக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

தேசிய நெடுஞ்சாலைகளில், கார் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்துவந்தால், விபத்து மற்றும் சாலை விரிவாக்கம் அடிக்கடி மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close