Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’டெரரிஸ்தானிடமிருந்து அறிவுரைகள் தேவையில்லை’ - பாகிஸ்தானுக்கு பதிலடிகொடுத்த இந்தியா

பாகிஸ்தான், டெரரிஸ்தானாக (Terroristan) மாறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. 


பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஷாகித் அப்பாஸி, ஐக்கிய நாடுகள் அவையில் முதன்முறையாக ஆற்றிய உரையில், 'ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத் தனியாக ஒரு தூதரை ஐ.நா நியமிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துவரும் ஜம்மு-காஷ்மீருக்குத் தனித் தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது இந்தியாவுக்கு ஆத்திரமூட்டியது. 

பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு, ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் கூட்டத்தில், இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சார்பில் பேசிய ஐ.நாவுக்கான இந்தியச் செயலர் ஈனம் காம்பீர், '‘பாகிஸ்தானின் குறுகிய கால வரலாற்றில், தீவிரவாதம் என்ற சொல்லின் பொருளாக அந்நாடு மாறிவிட்டது. பாகிஸ்தானின் தெருக்களில், தீவிரவாதிகள் சுதந்திரமாக உலா வரும் நிலையில், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக அந்த நாடு வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தோல்வியடைந்த நாடு என்று அறியப்படும் பாகிஸ்தானிடமிருந்து அறிவுரைகளைக் கேட்க உலகம் விரும்பவில்லை. பயங்கரவாதிகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிசெய்யும் தொழிற்சாலையே பாகிஸ்தான். ஒசாமா பின்லேடனுக்கும், முல்லா ஒமருக்கும் பாதுகாப்பு வழங்கிய நாடு பாகிஸ்தான். 

ஜம்மு-காஷ்மீர் என்பது எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துவந்திருக்கிறது, இனிமேலும் இருக்கும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிட்டு, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தாலும், பாகிஸ்தானின்  கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை'' என்று கூறினார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close