Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்.பி.ஐ துணை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. 


ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் மற்றும் பாரத மகிளா வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, முக்கியமான அறிவிப்பு ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்.பி.ஐ துணை வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் காசோலைகள் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி (IFSC) எண் ஆகியவை, செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு செயல்பாட்டில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், புதிய காசோலைகளை ஏ.டி.எம் மையங்கள், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆகியவைமூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று எஸ்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கவேண்டிய அவசியம், எல்லாக் கணக்குகளும் இல்லை என்று பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் விளக்கமளித்திருந்தது. அதன்படி, கார்ப்பரேட் ஊதியக் கணக்குகள், சிறிய மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகள் மற்றும் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில், குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் எஸ்.பி.ஐ விளக்கமளித்துள்ளது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close