Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காந்தி, நேரு, அம்பேத்கர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருந்தவர்கள்..! ராகுல் காந்தி பேச்சு

'காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருந்தவர்கள்தான்' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

rahul gandhi


அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இந்திய அரசியல்குறித்து பேசியிருந்தார். தற்போது, அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது, 'வெளிநாடு வாழ் இந்தியர்களாலேயே (என்.ஆர்.ஐ) காங்கிரஸ் இயக்கம் பிறந்தது. காங்கிரஸ் இயக்கம் ஒரு வெளிநாடு வாழ் இயக்கம். மஹாத்மா காந்தி, வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்.

நேரு, இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்தார். அம்பேத்கர், ஆசாத், பட்டேல் ஆகியோர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருந்தவர்கள். இதுபோல ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவைப் பொறுத்தவரை, வெள்ளைப் புரட்சியின் தந்தை வெர்கீஸ் குரியன், வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தவர்தான். அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து, இந்தியாவை மாற்றியவர்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close