Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனின் பதவிக்காலம் நீட்டிப்பு!

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

அர்விந்த் சுப்ரமணியன்

கடந்த 2014-ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரான மோடி, அதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியனை நியமித்தார். அவரது மூன்றாண்டு பதவிக்காலம், வரும் அக்டோபர் 16-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சகம் தொடர்ச்சியாக மறுத்துவந்தது.  

இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டிப்பதாக, மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘வரும் அக்டோபர் 16-ம் தேதியுடன் 3 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்யும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், மேலும் ஓராண்டுக்கு அந்தப் பதவியில் தொடர்வார்' என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close