Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பெட்ரோல் விலை குறையத் தொடங்கிவிட்டது’ - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலை குறையத்தொடங்கிவிட்டதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

Photo Credit: Twitter/Dharmendra Pradhan


பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம்செய்ய மத்திய அரசு அனுமதித்த பின்னர், அவற்றின் விலை அதிகரித்துவிட்டதாகக் கூறி, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விமர்சனங்களுக்கு சமீபத்தில் பதிலளித்திருந்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமெரிக்காவைத் தாக்கிய இர்மா மற்றும் ஹார்வி புயல்களால் சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் நிச்சயமற்ற தன்மை நிலவியதாகவும், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அவற்றின் விலை குறையும் என்றும் கூறியிருந்தார். 

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், ‘பெட்ரோல், டீசலின் விலை குறையத்தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு நாள்களுடன் ஒப்பிடுகையில், பெட்ரோலியப் பொருள்களின் விலை சற்று குறைந்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டுவருவதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அவ்வாறு கொண்டுவரப்பட்டால், அதன்மூலம் மக்கள் பயன்பெறுவர். மாநில, மத்திய அரசுகளின் நலன் பாதுகாக்கப்படும். வரி விதிப்பில் நிலையான கொள்கை கொண்டுவந்தால் மட்டுமே, மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியும்’ என்று அவர் தெரிவித்தார்.     
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close