Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டம்:  பிரதமர் மோடி இன்று பேசுகிறார்

மோடி அமித் ஷா

டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். ஐ.நா சபையில் பாகிஸ்தான் குற்றச்சாட்டு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விவகாரம், தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா, குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள்குறித்து முக்கிய அறிவிப்புகளை மோடி வெளியிடுவார் என்று கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.

பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டம், டெல்லியில் நேற்று தொடங்கியது. தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். இரண்டாவது நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்தக் கூட்டத்தில், 337 எம்.பி-க்கள், 1,400 எம்.எல்.ஏ-க்கள், அனைத்து சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த தேசிய செயற்குழு கூட்டப்பட்டுள்ளது. இதற்கு, 'அகண்ட' தேசிய செயற்குழுக் கூட்டம் என்று பெயரிட்டுள்ளனர். 

பா.ஜ.க அரசின் சமூக நலத்திட்டங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி, 'ஐ.நா சபையில் இந்தியா மீது குற்றம் சாட்டிய பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பார் என்றும் அமெரிக்காவில் பா.ஜ.க அரசை விமர்சித்த ராகுல் காந்திக்கும் பதில் சொல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்பட பல்வேறு பிரச்னைகள்குறித்து கட்சியினரிடையே பா.ஜ.க நிலைப்பாடுகளை விளக்கிப் பேசுவார் என்றும், அப்போது முக்கிய அறிவிப்புகளை மோடி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close