Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா சிகிச்சைபெற்ற வீடியோ பதிவை வெளியிடாதது ஏன்? - காரணம் சொல்லும் தினகரன்!

’ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சசிகலாவே எடுத்த வீடியோ என்னிடம் உள்ளது’ என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

dinakaran
 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைக் கருத்துகள் மீண்டும் மேலோங்கத் தொடங்கியுள்ளது. ‘’ஜெயலலிதாவை  மருத்துவமனையில் பார்த்ததாக பொய்தான் சொன்னோம். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்குறித்து சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைத்தான் வெளியே சொன்னோம்” என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், தினகரன் தரப்புக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தினகரன், ‘ஒவ்வொரு தமிழக அமைச்சருக்கும் ஊடகங்களைவிட தமிழக இளைஞர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக சிறப்பாகப் பதிலளித்துவருகின்றனர். யார் ஆதரவில் மாநில அரசு ஆட்டம் போட்டாலும், நீண்ட நாள்  நீடிக்காது . சி.பி.ஐ-யே விசாரணை செய்தாலும் முதலில் விசாரிக்கப்படுபவர், ஓ.பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும். பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்துவதற்காகத்தான்  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். ஜெயலலிதா  உயிரோடு இருந்திருந்தால், அவரையும் நீக்கியிருப்பார்களோ எனத் தோன்றுகிறது.

சில அ.தி.மு.க அமைச்சர்கள், ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் மரணம்குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சசிகலாவே எடுத்த வீடியோ என்னிடம் உள்ளது. ஜெயலலிதா சிகிச்சையின்போது, நைட்டி அணிந்திருந்ததால்தான் வீடியோ பதிவை வெளியிடவில்லை. ஜெயலலிதா எப்போதுமே கண்ணியமாகத்தான் காட்சியளிப்பார். எனவே, அந்த வீடியோ பதிவை உரிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைப்போம்’ என்று கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close