Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்மபூஷண் விருதுக்கு பி.வி.சிந்துவின் பெயர் பரிந்துரை!

பத்மபூஷண் விருதுக்கு, பிரபல பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயர் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

p.v.sindhu

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வந்த சிந்து, அதன்பிறகு, பல போட்டிகளில் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார். பிரீமியர் பேட்மின்ட்டன் லீக் தொடரில், சென்னை ஸ்மேஷர்ஸ் அணியை வழிநடத்தி சாம்பியனாக்கினார். அதைத்தொடர்ந்து, சையது மோடி சர்வதேசப் போட்டியிலும் சிந்துவே சாம்பியன். அடுத்து, மார்ச் மாதத்தில் இந்தியன் சூப்பர் சீரிஸ் போட்டியில், சக வீராங்கனை சாய்னாவை வீழ்த்தி, ஃபைனலில் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கரோலின் மரினை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து. அதைத் தொடர்ந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, கொரிய ஓப்பன் தொடரில் தங்கம் என வெற்றிவாகை சூடியே வலம் வந்துகொண்டிருக்கிறார் சிந்து.

தற்போது, ஆந்திர மாநிலத்தில் துணை ஆட்சியராகப் பதவி பெற்ற சிந்துவின் பெயர், பத்மபூஷண் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர், ஏற்கெனவே பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜுனா ஆகிய விருதுகளைக் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close