Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனி நாடு கோரிய நாகா குழுக்கள்மீது இந்திய ராணுவம் தாக்குதல்!

தனி நாடு கோரிக்கைகொண்ட நாகா குழுக்கள்மீது, இந்திய ராணுவம் மியான்மர் எல்லையைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

ராணுவத் தாக்குதல்

இன்று அதிகாலை, இந்திய ராணுவத்தினர் மியான்மர் எல்லையைத் தாண்டி நாகா குழுக்கள்மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், போராட்டக்காரர்கள் பலர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இத்தாக்குதல், முதலில் இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்றே கூறப்பட்டது. ஆனால், தற்போது இது ஒரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மியான்மர் எல்லையைத் தாண்டி, நாகா குழுக்களின் முகாம்மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலை, 70 கமாண்டோ வீரர்கள் நடத்தியுள்ளனர். இவர்களின் துல்லியமான தாக்குதலால், முகாமில் இருந்தோர் பலியாகியுள்ளதாகவும் இந்திய ராணுவத்தினர் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள்மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில், பலியானோரின் சரியான எண்ணிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close