Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்காளர் பட்டியலில் இருந்து வாஜ்பாய் பெயர் நீக்கம்!

உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், லக்னோ மாநகராட்சிக்குட்பட்ட பாபு பனார்ஸி தாஸ் வார்டு வாக்காளர் பட்டியலில் வாஜ்பாயின் பெயர் இருந்து வந்தது. இந்தநிலையில், நீண்டநாள்களாக குறிப்பிட்ட அந்த முகவரியில் வாஜ்பாய் வசிக்கவில்லை என்று அவரது பெயரை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீக்கினர்.

இதுதொடர்பாக பேசிய மண்டல அலுவலர் அசோக் குமார் சிங், ’வாஜ்பாய் கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் லக்னோவில் கொடுக்கப்பட்ட முகவரியில் வசிக்கவில்லை. அவர் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் லக்னோவில் வாக்களிக்கவில்லை. விதிமுறைப்படி தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட முகவரியில் ஒருவர் 6 மாதங்கள் வசிக்கவில்லை என்றாலே, அவரது பெயரை நீக்கலாம்’ என்று தெரிவித்தார்.

பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்த பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். உடல்நிலை காரணமாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close