Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை: ஆந்திர அரசு அதிரடி

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கு பெட்ரோல் அளிக்கக் கூடாது என்ற உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 


சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஆந்திராவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதி இன்று முதல் அமலாகியுள்ளது. சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அரசின் உத்தரவுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விதியை அமல்படுத்த உரிய சாலை பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கியும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த விதி முறையாக அமல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை வாரம்தோறும் ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆந்திராவில் சாலை விபத்துகளைத் தடுக்க சாலை பாதுகாப்பு விதிகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, புதிய விதி தொடர்பான விழிப்புஉணர்வை மக்களிடையே ஏற்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கார் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close