Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெங்களூரு நகரத்தின் மேயரான தமிழர்!

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரின் மேயராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு மேயர் சம்பத் ராஜ்


பெங்களூரு பெருநகர மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த மேயர் தேர்தலில் ஓட்டுப்போட, 266 பேர் தகுதி பெற்றனர். மேயர் தேர்தலில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத் ராஜ் என்ற தமிழர் போட்டியிட்டார். அவருக்கு சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தேர்தலில் அவர் 139 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, இவர் வார்டு கவுன்சிலராக இரண்டு முறை வெற்றி பெற்றவர். திருநெல்வேலியைச் சேர்ந்த சம்பத் ராஜ், பெங்களூருவின் 51-வது மேயராகப் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் போல பெங்களூரில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே மேயர் என்ற நடைமுறை கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை மேயரும், துணை மேயரும் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாற்றப்படுவது வழக்கம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close