Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் முதல்வரைச் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

காஷ்மீர் நிலைகுறித்து பார்வையிடுவதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். 


பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக காஷ்மீருக்குச் சென்றுள்ளார். நேற்று, ஸ்ரீநகர் சென்ற அவரை ராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர். காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள இந்திய நிலைகளை அவர் ஆய்வுசெய்தார். அதன்பின்னர், மாநில ஆளுநர் என்.என்.வோஹ்ராவையும் முதல்வர் மெஹபூபா முஃப்தியையும் சந்தித்து, பாதுகாப்பு விஷயங்கள்குறித்து பேசினார். லடாக்கில், இந்திய-சீன எல்லைக்கோட்டின் அருகே உள்ள இந்திய நிலைகளையும் சீதாராமன் பார்வையிட உள்ளார். இதேபோல, சியாச்சின் பகுதிக்கும் அவர் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லையில் படைவீரர்களின் ஆயத்தநிலைகுறித்தும் ராணுவ உயரதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலைமைகுறித்தும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார் என பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close