Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்துக்களைக் கொன்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! மியான்மரை வலியுறுத்தும் இந்தியா

'மியான்மர் கலவரத்தில் இந்துக்களைக் கொன்றவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இந்திய அரசு அந்நாட்டை வலியுறுத்தியுள்ளது. 

கோப்புப்படம்

மியான்மரில், கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக உள்நாட்டு மதக் கலவரம் நீடித்துவருகிறது. அந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், சிறுபான்மையினரான ரோஹிங்யா முஸ்லிம்கள்மீது கடும் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு, உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், வன்முறையில் இறந்தவர்களில் இந்துக்களும் அடங்கியுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ்குமார், 'எல்லா வகையிலான தீவிரவாதத்தையும் இந்தியா எதிர்க்கிறது. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close