Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஆஷிக்கி’ பட நடிகர் காலமானார்!

பாலிவுட் நடிகர் டாம் ஆல்டர் தோல், புற்றுநோய் காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.

டாம் ஆல்டர்

’ஆஷிக்கி’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்தவர், டாம் ஆல்டர். அமெரிக்கரான இவர், 1990 காலங்களில் வெளியான முக்கிய பாலிவுட் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். நடிகர், இயக்குநர், எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மைகொண்ட டாம் ஆல்டர், புனே திரைப்படக் கல்லூரியில் தன்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டவர். பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமல்லாது பெங்காலி, தெலுங்கு போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்துத் தனி முத்திரை பதித்தவர்.

ஓர் எழுத்தாளராக, சினிமா மற்றும் விளையாட்டுத்துறைகள் சார்ந்த பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது பன்முகத் தன்மையைப் பாராட்டும் விதமாக 2008-ம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சில மாதங்களாக தோல் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டுவந்த டாம் ஆல்டர், இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் உள்பட பல அரசியல் பிரமுகர்களும் திரைத்துறையினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close