Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காந்தி ஜெயந்தி..! மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே.அத்வானி ஆகியோர் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


மகாத்மா காந்தியடிகளின் 149-வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு காரணமாக இருந்ததற்காகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் மேற்கொண்டதற்காகவும், காந்தியடிகள் தேசப்பிதாவாகப் போற்றப்படுகிறார். அவர், சுதந்திர விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நாட்டு மக்களை ஒருங்கிணைத்தார். காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close