Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தாஜ்மஹால் விவகாரம் மதவாத அரசியலை வெளிப்படுத்துகிறது’: பிருந்தா காரத்

உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றுலா இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உத்தரப்பிரதேச அரசு. இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிருந்தா கராத்

ஐ.நா சபையின் 'கல்வி, அறிவியல் மற்றும் கலாசார' நிறுவனம் யுனெஸ்கோ. இந்த அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாரம்பர்ய சுற்றுலா இடங்களைத் தேர்வுசெய்து பட்டியல் வெளியிடும். அதில் எப்போதுமே இடம் பெறும் பெயர், 'தாஜ்மஹால்’. அப்படியான உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றுலா இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உத்தரப்பிரதேச அரசு. தற்போது அங்கு, பாரதிய ஜனதாவின் ஆட்சி நடந்துவருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்தியாவின் கலாசாரங்களைப் பிரதிபலிப்பது என்றால் அது ராமாயணமும் பகவத் கீதையும்தான். தாஜ்மஹால் அல்ல” என்றார்.

தற்போது, சுற்றுலாத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சுற்றுலா கையேட்டில், தாஜ்மஹால் இடம் பெறவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கராத், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றுலா இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பது உ.பி அரசின் மதவாத அரசியலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நடவடிக்கையை உ.பி. அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close