Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.50, 200 நோட்டுகளைத் தொடர்ந்து வருகிறது புதிய 100 ரூபாய்!

புதிய ரூபாய் நோட்டு

ந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. என்றாலும் தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்ததுடன், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நோட்டுகள் ஏ.டி.எம். மையங்களில் கிடைப்பதற்கு நான்கு மாதங்கள் பிடித்தது.

இதற்கிடையே, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்த போதிலும் இதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியாகவில்லை. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக அண்மையில் புதிய 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில்தான் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

200 ரூபாய் நோட்டு50 ரூபாய் நோட்டுகள் வெளியானபோதே மக்களிடத்தில் ஒருபீதி ஏற்பட்டது. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால், 50 ரூபாய் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே வீடுகளில், கடைகளில் இருப்பில் வைத்திருந்த 50 ரூபாய் நோட்டுகளை செலவிடும் போக்கு பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று அறிவித்துவிட்டதால், சற்றே பரபரப்பு குறைந்தது. 

இந்நிலையில், 100 ரூபாய் புதிதாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பால், தற்போது வீடுகளில் 100 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்போர் கலக்கம் அடையக் கூடும். ஏற்கெனவே கறுப்புப் பணம் ஒழிப்பு என்ற போர்வையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு, மக்கள் அல்லோலகல்லோலப் பட்டனர். 

வங்கிகள், ஏ.டி.எம். வாசல்களில் காத்துக்கிடந்ததை சாமான்ய மக்கள் யாரும் இன்னும் மறந்து விடவில்லை. அதற்குள் புதிய 100 ரூபாயா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 

என்றாலும் புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர் மக்கள். இதற்கிடையே புழக்கத்தில் வந்துள்ள 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் இன்னும் பல வங்கிகளுக்கே கிடைக்காத நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டுகள் வேறு வரப்போகிறது. ஏ.டி.எம். மையங்கள் 200 ரூபாய் நோட்டுகளை அளிப்பதற்கு தயாராகி விட்டனவா என்பதே இன்னும் தெரியவில்லை. அதற்குள் புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்கு வேறு ஏ.டி.எம். மையங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று இப்போதே தொழில்நுட்ப வல்லுநர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

புதிய திட்டங்கள் எதுவாயினும், புதிய ரூபாய் நோட்டுகள் ஆயினும் மக்களைப் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அதுவே எதிர்கால தலைமுறைக்கும் உகந்தது. பணவீக்கத்தையும், பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். "விரைவில் எதிர்பார்ப்போம் புதிய 100 ரூபாய் நோட்டுகளோடு, பிரதமர் மோடியின் புதிய இந்தியாவை"

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close