Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலவரபூமியில் ஆதித்யநாத்! - கேரளத்தை முற்றுகையிடும் பா.ஜ.க தலைவர்கள்!

கேரளத்தின் கண்ணூர் மாவட்டம் வன்முறைக்கும் மத மோதல்களுக்கும் பெயர் பெற்றது. கேரளத்தின் 'பிஹார் ' என்று இந்த மாவட்டத்தை அழைப்பார்கள். 2001ம் ஆண்டு முதல் கேரளத்தில் 120 பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 84 கொலைகள் கண்ணூரில் மட்டும் செய்யப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் "மக்களைப் பாதுகாக்க' என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பேரணி சென்று வருகின்றனர். 

கேரளத்தில் ஆதித்யநாத்

கண்ணூரில் தொடங்கிய முதல் நாள் பேரணியை  பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பேரணியில் 9 கிலோ மீட்டர் தொலைவு நடந்தும் சென்றார். ''கேரளத்தில் நடைபெறும் அரசியல் கொலைகளுக்கு முதல்வர் பினராயி விஜயன்தான் பொறுப்பு'' என அமித் ஷா பேசினார். இரண்டாவது நாளான இன்று  உத்தரபிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத், பேரணியில் பங்கேற்றார். ஆதித்யநாத் பேசுகையில்,''லவ் ஜிகாத் ஆபத்தானது. கேரள அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுளின் தேசம் அரசியல் கொலைகளின் களமாக மாறி வருகிறது'' என்றார்.  

ஆதித்யநாத்தைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா முதல்வர் பட்னாவிஸ், மனோகர் பாரிக்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் பேரணியில் பங்கேற்கிறார்கள். அக்டோபர் 17ம் தேதி திருவனந்தபுரத்தில் பேரணி முடிவடைகிறது. கண்ணூரில் மட்டும் 1991ம் ஆண்டிலிருந்து இதுவரை 45 மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்கள், 44 பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள், 15 காங்கிரஸ் தொண்டர்கள், 4 முஸ்லிம் கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close