Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சை பல்கலைகழகத்தின் மாணவிகளுக்கு இனி உடை கட்டுப்பாடு இல்லை!

பனாரஸ் இந்து

Chennai: 

வாரணாசியில் உள்ளது 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்'. அந்தப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ரோயனா சிங் (Royana Singh), 'இனி மாணவிகளுக்கு எந்தவிதமான உடை கட்டுப்பாடுகளும் கிடையாது' எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 21-ம் தேதி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், விடுதி வளாகத்திலேயே பாலியல் சீண்டல் செய்தார்கள். இதனால், மாணவிகள் பலரும் நியாயம் கேட்டுப் போராட்டத்தில் இறங்கினர். அந்த நேரம், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்குப் பயணம் மேற்கொண்டார். எனவே, போராட்டத்தை விரைந்து கலைக்கும் நோக்கத்தில், மாணவிகள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை  நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார். 

இந்தச் சம்பவத்தின்போது, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான கிரிஜ் சந்திரா திரிபாதி, “போராட்டம் நடத்தி பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் உண்டு செய்கிறீர்கள். பாலியல் சீண்டலுக்காக வெளிப்படையாகப் போராடுவது, உங்கள் தன்மானத்தை நீங்களே சந்தைப்படுத்துவதற்குச் சமம்” என்று கூறி, மாணவிகளின் போராட்ட நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றினார். 

பனாரஸ் இந்துஇதற்கிடையில், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒன்.என்.சிங் பதவி விலகினார். எனவே, கடந்த 29-ம் தேதி, ரோயனா சிங் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் 101 ஆண்டு கால வரலாற்றில், ஒரு பெண் இந்தப் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை. அவர் பொறுப்பேற்றதும், மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடுகள் விதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “மாணவிகள் மீது உடை கட்டுப்பாடு விதிப்பது, என் மீதே விதிப்பது போன்றது. ஒரு மாணவி தனக்கு எது சௌகரியமான உடை எனக் கருதுகிறாரோ, அதனை அணியலாம். அப்படிச் செய்ய முடியாது எனில், இந்தக் காலகட்டத்தில் நாம் வாழ்வதற்கே வெட்கப்பட வேண்டும். எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு பெண்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நான் இதற்கு முன்பு, இந்தக் கல்லூரியில் குறைகளைக் கேட்கும் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறேன். இதுபோன்ற பல பிரச்னைகளைச் சந்தித்து, தீர்வு அளித்திருக்கிறேன். எப்போதும் பெண்களின் சுயமரியாதை கவனத்தில் கொண்டுள்ளேன்'' என்று தெரிவித்தார். 

அவரிடம் 'பெண்கள் மது குடிப்பதற்கு தடை விதித்திருக்கிறீர்களா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, “இங்கு இருக்கும் அனைவருமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களுக்கு ஏன் நாங்கள் அப்படி ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்? இந்த விடுதியைச் சுற்றி எல்லா இடங்களிலும் விளக்குகள் அமைப்பதே என் தலையாய கடமை. அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரியான முறையில் இயங்குகிறதா என்பதும் ஆய்வு செய்யப்படும். பெண்கள் விடுதியில் பெண் காவலர்களும், ஆண்கள் விடுதியில் ஆண் காவலர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் ரோயானா சிங். 

தசரா விடுமுறை முடிந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை திரும்பி நிலையில், துணைவேந்தர் கிரிஷ் சந்திரா திரிபாதி, சொந்தக் காரணங்களுக்காக விடுப்பில் இருக்கிறார். அவருக்கு அடுத்த பதவியில் இருந்த நீரஜ் திரிபாதி, தற்காலிக துணைவேந்தராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close