Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஆட்சியை காங்கிரஸிடமே ஒப்படைக்கலாம்’: பிரதமருக்கு ராகுல் அட்வைஸ்!

'நாட்டையும் நாட்டுப் பிரச்னைகளையும் மோடியால் கையாள முடியவில்லை என்றால், ஆட்சியை காங்கிரஸிடமே பிரதமர் ஒப்படைத்துவிடலாம்’ என பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில், ஆறு மாத காலத்துக்குப் பின்னர் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார், ராகுல் காந்தி. காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, பா.ஜ.க-வின் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக ஒரு கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படவேண்டி, சில மாதங்களுக்குப் பின்னர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. பிரதமர் மோடி அவர்கள், இந்தியர்களின் நேரத்தை வீணடிப்பதை விடுத்து, நாட்டில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபடலாம். இந்தியாவுக்கு பாதிப்பு அளிக்கும் விஷயங்களைப் பிரதமர் மோடியால் கையாள முடியவில்லை என்றால், ஆட்சியைத் தாராளமாக காங்கிரஸிடம் தரலாம். காங்கிரஸ், ஆறு மாத காலத்தில் நாட்டில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்துவிடும். பிரதமர் மோடி, இதுவரை தான் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட  நிறைவேற்றவில்லை” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close