Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’மூன்றாண்டுகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன்’: எஸ்.பி.ஐ தலைவர் திட்டவட்டம்!

எஸ்.பி.ஐ வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரஜ்னிஷ் குமார், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது மூன்றாண்டு கால திட்டத்தை எடுத்துக்கூறினார்.

ரஜ்னிஷ் குமார்

நாட்டின் மிகப்பெரிய எஸ்.பி.ஐ வங்கியின் தற்போதைய தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் முடிகிறது. இதையடுத்து, புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ரஜ்னீஷ் குமார் அடுத்த வாரம் பதவியேற்க இருக்கிறார். அவர்,  மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று தெரிகிறது. வங்கியின் நிர்வாக இயக்குநராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, ரஜ்னீஷ் குமார், எஸ்.பி.ஐ-யின் முதலீட்டுப் பிரிவின் தலைவராகப் பதவி வகித்துவந்தார்.

இன்று, புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஜ்னீஷ் குமார், பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியை முற்றிலும் மாற்றுவதற்காகச் செயல்படத் தொடங்குவேன். இன்னும் மூன்றாண்டு காலத்தில், முற்றிலும் மாறுபட்ட ஒரு வங்கியைக் காண்பீர்கள். 420 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டது பாரத ஸ்டேட் வங்கி” என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close