Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’குடியரசுத் தலைவர் மாளிகை உலகம் முழுதும் வாழும் இந்தியர்களின் சொத்து’ - ராம்நாத் கோவிந்த் பேச்சு

'டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களின் சொத்து' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். 


குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர், முதல் அரசுமுறைப் பயணமாக ஜிபவுட்டி, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு  ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரிக்குப் பிறகு, கடந்த 45 ஆண்டுகளில் எத்தியோப்பியா செல்லும் முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை இதன்மூலம் ராம்நாத் கோவிந்த் பெறுகிறார். தலைநகர் அடிஸ் அபாஸில், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே அவர் உரையாற்றினார். 

அப்போது பேசிய ராம்நாத் கோவிந்த், ‘கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களுக்கும் தங்களுடைய நாட்டுக்கும் உரிய மரியாதையை எத்தியோப்பிய மக்களிடம் பெற்றுள்ளனர். ஆசிரியர்களாக தேசத்தை உருவாக்கும் பணியிலும், தொழில்முனைவோராகப் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் நீங்கள் இங்கு திகழ்கிறீர்கள். நறுமணப் பொருள்களுடனும், நல்ல எண்ணங்களுடனும் எத்தியோப்பியாவுக்கு நீண்டகாலத்துக்கு முன்னர் வருகைதந்த நமது முன்னோர்கள், தங்கத்துடனும் எத்தியோப்பியாவின் அறிவுக் களஞ்சியத்துடனும் தாயகத்துக்குத் திரும்பினர்.

நமது பாரம்பர்ய மருத்துவ முறையான ஆயுர்வேதாவின் நன்மைகள்குறித்து எடுத்துரைப்பதில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறீர்கள். சர்வதேச யோகா தினம், எத்தியோப்பியாவில் கொண்டாடப்பட்டது சிறப்பு வாய்ந்தது. லிபியாவாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மீது அரசு அக்கறைகொண்டிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் டெல்லிக்கு வரும்போது, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருமாறு உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அது, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்குச் சொந்தமானது’ என்று பேசினார்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close