Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெளரி லங்கேஷ் கொலை; சனாதன் சாஸ்தா அமைப்புக்குத் தொடர்பு?

னாதன் சாஸ்தா அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேருக்கு, கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புள்ளதாகச் சிறப்பு போலீஸ்படை சந்தேகிக்கிறது. 

சானதன் சாஸ்தா அமைப்பு

கன்னட எழுத்தாளரும் சமூகப் போராளியுமான கொளரி லங்கேஷ், செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூருவில் கொல்லப்பட்டார். சனாதன் சாஸ்தா அமைப்பைச் சேர்ந்த பிரவீன் லிம்கார் (கோலாப்பூர்) ஜெயப்பிரகாஷ் (மங்களூரு) சாரங் அகோல்கர் (புனே) ருத்ரா பாட்டீல் (சாங்லி) வினே பவார் (சதாரா) ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எழுத்தாளர் கல்புர்கியைக் கொலைசெய்ய பயன்படுத்தியது போன்ற 7.66 மி.மீ நாட்டுத் துப்பாக்கிதான் கௌரி லங்கேஷைக் கொலை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேரில், வினே பவாரைத் தவிர மற்ற நான்கு பேர், இன்டர்போல் அமைப்பால் சிவப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டவர்கள். 2009-ம் ஆண்டு நிகழ்ந்த மட்கான் குண்டு வெடிப்பு வழக்கில், இவர்கள் தொடர்புடையவர்கள். எழுத்தாளர் நரேந்திர தபோல்கர், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே, எழுத்தாளர் கல்புர்கி கொலையிலும் இவர்களுக்குத் தொடர்புள்ளதாகப் சொல்லப்படுகிறது. 

இதற்கிடையே, சனாதன் சாஸ்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சேத்தன் ராஜ்ஹன்ஸ் கூறுகையில், ''எங்கள் அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை கிடையாது. தன்னார்வத் தொண்டர்கள்தான் உண்டு. கௌரி லங்கேஷ் கொலை வழக்கில், சிறப்பு போலீஸ் படை எங்களை விசாரணை செய்ய விரும்பினால், நாங்கள் தயார்''எனத் தெரிவித்துள்ளார். 

சனாதன் சாஸ்தா அமைப்பு, 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோவாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்த அமைப்புதான், இந்தத் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close