Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குர்மீத்துக்கு சிறை; கலவரம் ஏற்படுத்த ரூ. 5 கோடி ஒதுக்கிய ஹனீப்ரீத்!

போலிச் சாமியார் குர்மீத் கைதுசெய்யப்பட்டதையடுத்து, அவரின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத், கலவரத்தை ஏற்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கியதும் ஒன்றரைக் கோடி ரூபாயை உடனடியாகக் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

'தேரா சச்சா' அமைப்பின் தலைவர் குர்மீத் சிங்கிற்கு, பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும், ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் ஆகஸ்ட் 25-ம் தேதி, பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாகின. கலவரத்தைத் தூண்ட குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் சிங் முக்கியக் காரணமாக இருந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர் தலைமறைவானார். கிட்டத்தட்ட 38 நாள்கள் கழித்து, பஞ்சாப் போலீஸிடம் ஹனீப்ரித் பிடிபட்டார் .

பஞ்ச்குலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்துவந்தாலும், சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.  குர்மீத் கைதுசெய்யப்பட்டதும், கலவரத்தை தூண்டுவதற்கு 5 கோடி ரூபாயை ஹனிப்ரீத் உடனடியாக ஒதுக்கியிருக்கிறார். அதில் 1.25 கோடி ரூபாய் தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த சாமக்சிங்தான் பட்டுவாடா செய்துள்ளார். தற்போது, ஹனிப்ரீத்துடன் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close