Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

60 பொருள்களுக்கு வரி குறைப்பு... ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்!

Chennai: 

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது போன்ற ஒரு நிலைதான் உருவாகியிருக்கிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டதோடு தொழில்களும் பாதித்தன. இதனால் நுகர்வு குறைந்து நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஒட்டுமொத்தமாகவே இந்தியப் பொருளாதாரம் கேள்விக்குறியானது. இதனால் அரசின் மீதான விமர்சனங்களும் கடுமையாயின. மேலும், வரி செலுத்துபவர்கள்தாம் மேலும் மேலும் வரிச்சுமைக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. 

வரி

``ஜி.எஸ்.டி நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தில் நெகட்டிவான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது'' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கூட்டத்திலும் வட்டிவிகிதத்தைக் குறைக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அரசு தற்போது இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி கவுன்சலிங் கூட்டம்  நடைபெற்றது. இது, ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்பட்ட பிறகு நடக்கும் 22-வது கூட்டம். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர், நிதி அமைச்சர், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பல மணி நேரம் ஆலோசித்தனர். அதன் பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம்.

1. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி கீழ் நோக்கியுள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதால், ஜி.எஸ்.டி வரி நடைமுறையில் பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளின் வரியைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பொருள்கள் மற்றும் சேவைகளின் வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

2. வரி குறைக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள், பெரும்பாலானவை 28 சதவிகித வரி வரம்புக்குள் வருபவையாக இருக்கும். அவற்றில் சில, 18 சதவிகித வரம்பிலிருந்து 12 சதவிகித வரம்புக்குக் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. 

3. சிறு குறு வணிகர்களுக்கு வரிக்கணக்குத் தாக்கல் செய்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் தரப்பிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தக் கூட்டத்தில், அவர்களுக்குச் சாதகமாக முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சிறு, குறு வணிகர்களின் வரிக்கணக்குத் தாக்கலை மாதாமாதம் இல்லாமல், காலாண்டு அடிப்படையில் தாக்கல் செய்ய அனுமதிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், காம்போசிஷன் திட்டம் 75 லட்சம் ரூபாய் என்ற வரம்பிலிருந்து 1 அல்லது 1.5 கோடி ரூபாயாக உயர்த்தப்படலாம். மேலும், காம்போசிஷன் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யவும் வரும் மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. முக்கியமாக, ஜி.எஸ்.டி வரியில் வரி திரும்பப் பெறப்படுவது மிகவும் தாமதமாவதாக ஏற்றுமதியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்களின் பணம் 65 ஆயிரம் கோடி ரூபாய் இன்புட் டேக்ஸ் கிரெடிட் சிஸ்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இதற்காக விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது. 

5. உணவகங்களுக்கு வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.கைவினை பொருள்களுக்கு 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக வரி குறைக்கப்படுகிறது. எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வாட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

6. ரியல் எஸ்டேட்டில் பயன்படுத்தப்படும் கற்களுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படலாம். அரசுத் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் உணவுகளுக்கான வரி, 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படலாம்.

ஜி.எஸ்.டி வரி நடைமுறை, இந்தியப் பொருளாதாரத்தில் மிகச் சிக்கலான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதை இப்போதுதான் அரசு உணர ஆரம்பித்திருக்கிறது. விரைவில் நியாயமான வரி விதிக்கப்பட்டு, விலை குறைந்தால் நுகர்வும் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். பொருளாதார வளர்ச்சி வந்தால்தான் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கும். வட்டிவிகிதம் குறைந்தால்தான் வங்கிகள் வட்டிவிகிதத்தைக் குறைக்கும், முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி கூடும், வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க பிரதமர் அவர்களே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close