Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொந்த ஊர் மண்ணை நெற்றியில் பூசிய மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குஜராத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான வத்நகரை (Vadnagar) சென்றடைந்தார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 


மோடி

மோடியின் சொந்த மாநிலமான குஜராத் விரைவில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். முக்கியத் திட்டங்களை தொடங்கிவைத்தார். இன்று காலை அவரின் சொந்த ஊரான வத்நகரை அடைந்த மோடி, காரில் உற்சாகமாக வலம் வந்தார். அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தப்படி சென்றார்.

குஜராத்

பின்னர் அவர் படித்த பள்ளிக்குச் சென்றார். அங்கு வெளியே மண்ணை எடுத்து மூன்று முறை நெற்றியில் பூசிக்கொண்டார். அப்போது சுற்றியிருந்த மக்கள் கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். 


இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள மோடி சுமார் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டிருந்தார். வத்நகரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவமனையைத் தொடங்கிவைத்தார் மோடி. மேலும், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார். குஜராத் முதல்வர் விஜய் ருபானியும், துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close