Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்!'' -  ஆனந்திபென் படேல் கோரிக்கை! 

குஜராத் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ''குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும்'' அந்த மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனந்திபென் படேல்

இதுகுறித்து பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ''நான், கடந்த 31 வருடங்களாகப் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுவருகிறேன். பி.ஜே.பி-யின் கொள்கைகளின் அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டும். எனவே, அடுத்துவரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கான புதிய தலைவர்களை உருவாக்க முடியும். இதர துறைகளைப் போன்று அரசியலுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எதிர்காலத்தில் பி.ஜே.பி-யில் எனக்கு எந்தப் பொறுப்பை அளித்தாலும் அதைச் சிறப்புடன் செய்துமுடிப்பேன்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close