Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி குறைத்து சாதனை படைத்த குஜராத் அரசு!

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான வாட் வரியை குஜராத் அரசு குறைத்துள்ளது. இதன்மூலம் எரிபொருளுக்கான வாட் வரியைக் குறைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பு அந்தஸ்தைப் பெறுகிறது, குஜராத்.

petrol

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான ’வாட்’ என்னும் மதிப்புக்கூட்டல் வரியை 4 சதவிகிதம் வரை குறைப்பதாக இன்று குஜராத் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசால் விதிக்கப்பட்ட எரிபொருள் விலை நிர்ணயத்தைத் தாண்டி, இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையை குஜராத் அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை ரூ.2.93 காசுகள் குறைத்தும், டீசல் விலை ரூ. 2.72 காசுகளாகக் குறைத்தும் வழங்கப்படும்.

குஜராத் மாநிலத்தில், இந்த வாட் வரி குறைக்கப்பட்ட விற்பனை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரசாத், “ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான வாட் வரியை 5 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும். இம்மாதிரியாக எரிபொருள்களின் மூலம் பெறப்படும் வரியால் அதிகப் பயனடைவது, மாநில அரசுகள் மட்டுமே” எனக் கூறியிருந்தார். இதையடுத்து, மத்திய அரசு வேண்டுகோளின் அடிப்படையில், வாட் வரியைக் குறைத்த முதல் மாநில அரசு என்ற பெருமையைப் பெற்றுள்ளது, குஜராத்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close