Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீஸ் நவம்பர் 1 வரை தொடரும்: உச்ச நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம்மீது விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நவம்பர் 1-ம் தேதி வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கார்த்தி சிதம்பரம்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்தது. அவர் உள்ளிட்ட நான்கு பேர், தேடப்படும் நபர்களாக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம், 'நான் வெளிநாடு செல்லப்போவதில்லை. எனக்கு விதிக்கப்பட்டுள்ள லுக் அவுட் நோட்டீஸ் செல்லுமா, செல்லாதா என்று தெளிவுபடுத்த வேண்டும்' என்று கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். மேலும், கார்த்தி சிதம்பரம்மீது விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸும் வரும் நவம்பர் 1-ம் தேதி வரை தொடரும் என்று கூறியுள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close