Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''சாதிப் பாகுபாடுதான் கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது'' - பிரதமர் மோடி!

''சாதிப்  பாகுபாடுதான் கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது'' எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மோடி

சமூகச் சீர்திருத்தவாதி நானாஜி தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் சமூகநலத் தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் 115–வது பிறந்த நாள் விழா புதுடெல்லியில் கொண்டாடப்பட்டது.  இதில் கலந்துகொண்டு பேசிய மோடி, ''நம் நாட்டின் கிராமங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது சாதிப்  பாகுபாடுதான். இதுதான் வி‌ஷமாகப் பரவி கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதனைக் களைந்து ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியை மேம்பாடு அடையச் செய்வது தற்போது மிகவும் அவசியமாகும். கிராம முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரங்களில் ஏற்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் கிராமப்புறப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close