Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் இன்று 48-வது கவர்னர்கள் மாநாடு!

ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லியில் இன்று, 48-வது கவர்னர்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையில் இது நடைபெற உள்ளது. இந்த மாநாடு, 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறும். 

இந்த மாநாட்டில், 27 மாநில கவர்னர்களும்  யூனியன் பிரதேசங்களின் மூன்று துணைநிலைக் கவர்னர்களும் கலந்துகொள்கின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உள்ளிட்டோரும் இதில் உரையாற்றுகின்றனர்.  மாநாட்டின் முதல் அமர்வில், ‘புதிய இந்தியா 2022’–க்கான சாத்தியக்கூறுகள் குறித்து ‘நிதி ஆயோக்’ வழங்கும் கருத்தாக்கம் இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில், மாநிலங்களில் உயர்கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள்குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உட்பட, சில அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவியேற்ற பிறகு, நடைபெறும் முதல் கவர்னர்கள் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close