Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவி மயமான உத்தரப்பிரதேசப் பேருந்துகள்! - ஆதித்யநாத் அரசின் அதிரடி

ந்தியாவைப் பொறுத்தவரை, உத்தரப்பிரதேசம் பெரிய மாநிலம். மக்கள் தொகை மிதமிஞ்சியதோடு,  இந்தியாவுக்கு அதிக பிரதமர்களைத் தந்த மாநிலமும்கூட.  தமிழகம் மாதிரி உத்தரப்பிரதேசத்தில் போக்குவரத்து வசதி சிறப்பாக இருக்கும் என்று கருதிவிடாதீர்கள். பெரிய நகரமான அலகாபாத்தில்கூட பேருந்துகள் அதிகளவில் காண முடியாது. பெரும்பாலும் குதிரை வண்டிப் பயணம்தான். வசதி படைத்தவர்கள் ஆட்டோவில் செல்வார்கள். 

காவிக்கு மாறிய உ.பி அரசு பஸ்கள்

இந்த மாநிலத்தின் போதாத காலம், பதவிக்கு வருபவர்கள் தங்கள் இஷ்டப்படி மக்களை ஆட்டுவிப்பார்கள். பகுஜன் சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தால், மாயாவதி யானைச் சிலைகளை அமைப்பார். இப்போது ஆதித்யநாத் காலம். இவர், பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் புத்தகப்பை மற்றும் சான்றிதழ்களைக்கூட காவி நிறத்துக்கு மாற்றினார். 

அந்த வரிசையில், மாநிலப் பேருந்துகளைத் தற்போது ஆதித்யநாத் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளார். இதுவரை, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் உ.பி. அரசுப் பேருந்துகள் இயங்கிவந்தன. ஆனால் தற்போது, காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ள 50 பேருந்துகளின் இயக்கத்தை லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியின்போது, காவி நிற பலூன்களும் கட்டப்பட்டிருந்தன.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close