Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை; இமாச்சலப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி அறிவித்துள்ளார். நவம்பர் 9-ம் தேதி நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை வரும் திங்கள்கிழமை தெரிவிக்கப்படும் என்று ஜோதி கூறியுள்ளார்.
 

தலைமை  தேர்தல் ஆணையர் ஜோதி

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தற்போது பதவி வகித்துவரும் அரசின் ஆட்சிக் காலம் விரைவில் முற்றுப்பெறுகிறது. இதையொட்டி அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பை இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி வெளியிட்டார். செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதி, 'இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும். குஜராத் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதுகுறித்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை தெரிவிக்கப்படும். அதே நேரத்தில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதிக்குள் எண்ணப்படும்' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close