Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: பகீர் கொடுத்த செம்மலையின் மனு!

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த 12 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செம்மலை எம்.எல்.ஏ மனுத்தாக்கல் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செம்மலை

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியபோது செம்மலையும் ஆதரவு தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அணியுடன் பன்னீர்செல்வம் அணி இணைந்தபோது தமக்கும் அமைச்சர் பதவியை செம்மலை எதிர்பார்த்ததாகக் கூறப்பட்டது. ஆனால் பதவி கிடைக்காததால் செம்மலை அதிருப்தியில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் செம்மலை திடீரென ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக 12 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 12 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். அ.தி.மு.க-வின் 12 எம்.எல்.ஏ-க்களில் செம்மலையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close