Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அபராதம் எல்லாம் செலுத்த முடியாது, சிறை செல்லவும் தயார்!'- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பரபரப்பு பேட்டி!

புதுடெல்லி: யமுனை நதியை சேதப்படுத்தி, வாழும் கலை அமைப்பின் உலகக் கலாச்சார நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறி, அந்த அமைப்பிற்கு ரூ 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாது என்றும், அதற்காக சிறை செல்லவும் தயார் என்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.  

வாழும் கலை அமைப்பின் சார்பில் டெல்லியில் உலக கலாசார விழா நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்கி வருகிற 13-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து 35 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஏற்பாடுகள் பலமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தி யமுனை நதி சமவெளியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்தது தொடர்பாக, தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு  அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டி அளித்துள்ளார்.

அதில், " நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எந்த மரத்தையும் வெட்டவில்லை.  இந்த நிகழ்ச்சியில் லட்சக் கணக்கான மக்கள்  கலந்து கொள்கிறார்கள். இதனை தனியார் நிகழ்ச்சி என்று எப்படி கூற முடியும்? இதனை கலாச்சார ஒலிம்பிக் என்று பலரும் அழைக்கின்றனர்.இது போன்ற நிகழ்ச்சி உலகின் பல நாடுகளிலும் நடந்துள்ளது. பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள அபராதம் ரூ. 5 கோடியை செலுத்த முடியாது.
அதற்குப் பதிலாக சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளோம். அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டும் அபராதம் விதிக்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close