Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நான் ஒரு இந்திய எம்.பி; சட்டத்தை மதிப்பவன்'- லண்டனில் விஜய் மல்லையா ட்வீட் !

நாட்டை விட்டு வெளியேறிய பிறகு விஜய் மல்லையா வெள்ளிக்கிழமை காலை தனது ட்வீட்டில், '' நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறுவது முட்டாள்தனமானது. நான் ஒரு சர்வதேச பிசினேஸ்மேன். வர்த்தகம் தொடர்பாக  அடிக்கடி இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவன். நான் நாட்டை விட்டு தப்பியும் ஓடவில்லை. தலைமறைவும் ஆகவில்லை.

நான் ஒரு இந்திய எம்.பி. எனது தாய்நாட்டின் சட்டத்திட்டங்களை மதிப்பவன். அதற்கு இணங்குபவன். மீடியாக்கள் என்னிடம் விசாரணை நடத்த வேண்டாம். மீடியாக்கள் டி.ஆர்.பி ரேட்டுக்காக பொய் புரட்டுகளை சொல்கின்றன. மீடியாக்களுக்கு பல ஆண்டுகாலமாக உதவிகள் செய்து வந்துள்ளேன். அதனை மறந்து விட வேண்டாம். தற்போது டி.ஆர்.பி ரேட்டுக்காக பொய் சொல்ல வேண்டாம்.

இப்போது எனது சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டுமென்று சொல்கின்றனர். வங்கிகளுக்கு தெரியாதா? அல்லது நாடாளுமன்றத்தில் நான் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பார்த்தால் தெரியாதா?  எனக் கூறியுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ