Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வயலில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு!

ஹோஷியாபூர்: வயல்வெளியில் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதை அடுத்து, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் நேற்று மதியம் வழக்கமான பயிற்சிக்காக வானில் பறந்தது. அந்த ஹெலிகாப்டரில், ஒரு பைலட், துணை பைலட் மற்றும் ராணுவ அதிகாரிகள் குரிக்பல்சிங், பி.எஸ்.ஜோகன் ஆகியோர் பயணித்தனர்.

அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டிருக்கிறது. உடனே அந்த ஹெலிகாப்டரின் பைலட், சாமர்த்தியமாக செயல்பட்டு வழியில் உள்ள மைலி கிராமம் அருகில் உள்ள ஒரு கோதுமை வயலில், ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கி உள்ளார்.

இதில், ராணுவ அதிகாரிகள் இருவரும் லேசான காயம் அடைந்தனர். பைலட் மற்றும் துணை பைலட் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து அந்த வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஹோஷியாபூர் போலீசார், ராணுவ அதிகாரிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வயல்வெளியில் திடீரென ராணுவ ஹெலிக்காப்டர் தரை இறங்கியதை அடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ