Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாவோயிஸ்ட்களுடன் துப்பாக்கிச் சண்டை: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் கன்கெர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த கன்கேர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில்,  இன்று அதிகாலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அடங்கிய கூட்டுப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, கன்கெர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், துப்பாக்கியுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

உடனே பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அப்போது, எதிர்பாரதவிதமாக நக்சலைட்டுகள் சுட்டதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

உடனடியாக படுகாயம் அடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் பலியான வீரர்கள் 2011-12 -ம் ஆண்டுகளில்  இந்த படைப்பிரிவில் இணைந்த விஜய குமார், ராக்கேஷ் நெஹ்ரா என்று தெரிய வந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ