Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹோம்வொர்க் செய்யாததால், ஆடைகள் களையப்பட்ட மாணவர்கள்!

மும்பையில் ஒழுங்காக படிக்காத மாணவர்களை நிர்வாணப்படுத்தி வெளியே நிறுத்திய டியூசன் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை மால்வானி பகுதியில் உள்ள கோச்சிங் சென்டடில் 2 மற்றும் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் ஹோம் வொர்க் முறையாக செய்யாத காரணத்தினால், சம்பந்தப்பட்ட டியூசன் மைத்தின் ஆசிரியர் ஆடைகளை களைந்து தண்டனை கொடுத்துள்ளார்.

அங்கிருந்த சிலர் இதனை படம் வீடியோவாக எடுத்து வாட்ஸப்பில் பரப்பியுள்ளனர்.

மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்தாசிலிகர் வாட்ஸப்பில் இதனை பார்த்து விட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மால்வானி போலீசார் டியூசன் சென்டரை நடத்தி வந்த கணேஷ் நாயர், ஸ்ரீதேவி, சரேஜ் ஆகிய 3 பேர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்ச சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஆனால் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 


 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ