Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!

ஹைதராபாத்: செக் மோசடி வழக்கில், பிரபல தொழிலபதிர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஹைதராபாத் நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தை கட்டிய பிரபல தொழில் கட்டமைப்பு நிறுவனமான ஜி.எம்.ஆர். நிறுவனம், கிங் ஃபிஷர் நிறுவன இயக்குநரும், பிரபல தொழிலபதிருமான விஜய் மல்லையா மீது நீதிமன்றத்தில் செக் மோசடி புகார் அளித்தது. இதுதொடர்பான வழக்கு ஹைதராபாத் பெருநகர கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், கடந்த மார்ச் 10-ம் தேதி விஜய் மல்லையா மற்றும் கிங்ஃபிஷர் நிறுவன உயரதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், கடந்த 2-ம் தேதியே விஜய் மல்லையா ரகசியமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்.

மேலும், தற்போது இந்தியாவுக்கு வருவதற்கான தருணம் சரியாக இல்லை என்பதால், நேரில் ஆஜராக முடியவில்லை என விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விஜய் மல்லையா மற்றும் கிங் ஃபிஷர் நிறுவன உயரதிகாரிகளுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்ட ஹைதராபாத் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ஆனால், ஹைதராபாத் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ