Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு நோட்டீஸ்: காங். கண்டனம்!

புதுடெல்லி: இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு ராகுல் காந்திக்கு, நாடாளுமன்ற நெறிமுறைக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இதற்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பேகோப்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ராகுல் காந்திக்கு, அந்த நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் அங்கே தங்கியிருந்த போது, தன்னை ஒரு இங்கிலாந்து குடிமகன் என கூறியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி புகார் எழுப்பினார். மேலும், இங்கிலாந்து குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை மற்றும் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற சபாநாயகருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கிழக்கு டெல்லி எம்.பி. மகேஷ் கிரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் புகார் மனு அளித்தார். அதில், "பிரிட்டனில் புதிதாக நிறுவனம் தொடங்குவதற்கு ராகுல் காந்தி அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது, தன்னை அந்நாட்டின் பிரஜை என்று தெரிவித்திருப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதை பரிசீலித்த அவர், கடந்த ஜனவரி மாதம் இந்த புகாரை நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவுக்கு அனுப்பி வைத்தார்.

எல்.கே.அத்வானி தலைமையிலான இந்த குழு, ராகுல் காந்திக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து நெறிமுறைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான அர்ஜுன் ராம் மெக்வால் கூறுகையில், ‘லண்டனில் இருந்தபோது இங்கிலாந்து குடிமகன் என அறிவித்ததற்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி கூறும்போது, ''இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அதில் எனக்கு எதிராக தவறு எதுவும் கண்டுபிடிக்கப்பட்டால் அரசு என்னை சிறைக்கு அனுப்பட்டும். இந்த விவகாரத்தை நான் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்" என்றார்.

நாடாளுமன்றக் குழுவின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என அக்கட்சி கூறியுள்ளது. மேலும், நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருப்பதாக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார்.

திக்விஜய் சிங் கூறுகையில், ‘இந்தியாவில் பிறந்த ஒருவரின், தந்தையும், பாட்டியும் இந்திய பிரதமராக இருக்கும்போது, அவர் வேறு சில நாடுகளின் குடிமகனாகவும் இருக்க முடியும். எனவே இந்த பிரச்னையை நாடாளுமன்ற நெறிமுறைக்குழு தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close