Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். அமைப்போடு ஆர்.எஸ்.எஸ்.-ஐ ஒப்பிட்டேனா? குலாம் நபி ஆசாத் விளக்கம்!

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை, ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு ஒப்பிட்டு பேசவில்லை என குலாம் நபி ஆசாத் டெல்லி மேல்–சபையில் விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், டெல்லியில் முஸ்லிம் அமைப்பு சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்டு அவர் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரத்தை டெல்லி மேல்–சபையில் நேற்று பா.ஜ.க. உறுப்பினர்கள் எழுப்பினர். பூஜ்ஜிய நேரத்தில் இந்த பிரச்னையை எழுப்பிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர், குலாம் நபி ஆசாத் தனது கருத்துகளை திரும்ப பெறுவதுடன், அவரும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது குலாம் நபி ஆசாத், டெல்லி நிகழ்ச்சியில் தான் பேசிய உரை அடங்கிய சி.டி. ஒன்றை அவையில் சமர்ப்பித்து பேசும்போது, ''ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நாங்கள் எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ, அதே அளவுக்கு ஐ.எஸ். போன்ற அமைப்புகளையும் எதிர்க்கிறோம்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நான் ஒருபோதும் ஐ.எஸ். அமைப்புடன் ஒப்பிட்டு பேசவில்லை. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் நான் பேசிய உரை அடங்கிய சி.டி. இதோ இருக்கிறது. இதை இந்த அவையின் தலைவர் அருண் ஜெட்லி மற்றும் அவரது பா.ஜனதா தோழர்கள் முழுவதுமாக கேட்கலாம். அப்போது எனது உரையில் ஏதாவது தவறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், எனக்கு எதிராக நீங்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரலாம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ