Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய மாணவி- அதிர்ச்சியில் உறைந்த போலீஸ் (வீடியோ)

நண்பர்களுடன் சேர்ந்து,  காவல் நிலையத்தை 19 வயதுடைய மாணவி ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

குடித்துவிட்டு காலி பாட்டில்களை வீசி,  சிலர் தகராறில் ஈடுபடுவதாக ஹைதராபாத் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றபோது, பக்கத்து வீட்டு கூரையில் இளம்பெண் உள்பட 4 பேர் பாட்டில்களை வீசி தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, 4 பேரையும் காவல்துறையில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது, அந்த இளம்பெண் மற்றும் நண்பர்கள் காவலர்களை தாக்கியதுடன், அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, இளம்பெண் உள்பட குடிபோதையில் இருந்த அவரது நண்பர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


விசாரணையில், குடிபோதையில் இருந்த பெண் கொல்கத்தாவை சேர்ந்த பிரியா சிங் என்றும், தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close